​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலையை உடைத்த விஷமிகள்

Published : Jan 05, 2020 9:29 AM

பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலையை உடைத்த விஷமிகள்

Jan 05, 2020 9:29 AM

குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்ரேலி மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணா ஏரியின் கரையில் நிறுவப்பட்டிருந்த இந்தச் சிலையை, சூரத்தை மையமாக் கொண்டு இயங்கி வரும் தோலோக்கியா என்ற தொண்டு நிறுவனம் பராமரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காந்தியின் சிலை பல்வேறு துண்டுகளாக உடைக்கப்பட்டுக் கிடந்தது. ஏரியை ஆக்கிரமிப்புச் செய்தவர்கள் யாரேனும் இந்தச் சிலையை உடைத்திருக்கலாம் என்று கூறியுள்ள லாதி நகர காவல் ஆய்வாளர் ஒய்.பி. கோஹில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது விஷமிகள் உடைத்த இந்தச் சிலையை கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.