டெல்லி மற்றும் வடமாநிலங்களில் இன்று அதிகாலை காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது.
டெல்லியில் காலை எட்டு மணி வரை பனிமூட்டம் நீங்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கடும் குளிராக இருந்ததால் பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். இன்று காலை 7 மணி நிலவரப்படி வெப்ப நிலை 9 டிகிரி செல்சியசாக இருந்தது.
இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் காலை நடைபயணம் மேற்கொண்டவர்கள் கடும் குளிர் நீடிப்பதாக தெரிவித்தனர். பனிமூட்டம் காரணமாக பல்வேறு ரயில்களும் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை தாமதமாக ஓடுகின்றன.
டெல்லி தவிர ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட் , உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் குளிரின் தாக்கம் கடுமையாக உள்ளது.