விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் ஆத்திரம்
Published : Jan 05, 2020 7:42 AM
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் ஆத்திரம்
Jan 05, 2020 7:42 AM
மும்பைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் விமானியின் அறைக்கதவை தட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விமானிகள் வெளியே வராவிட்டால் பிரதான வாயிலை திறக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர். பயணிகளை சமாதானப் படுத்த முயன்ற ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் பயணிகளால் தாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா அதிகாரிகள் உத்தரவிட்டனர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்து ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.