​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகப் பெரிய மலர் - விஞ்ஞானிகள் ஆய்வு..!

Published : Jan 04, 2020 9:00 PM

உலகின் மிகப் பெரிய மலர் - விஞ்ஞானிகள் ஆய்வு..!

Jan 04, 2020 9:00 PM

இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது.

அந்நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் காட்டுக்குள் ரப்லேசியா அர்னால்டி என்ற தாவரவியல் பெயர் கொண்ட அந்த காட்டுப்பூ மலர்ந்துள்ளது.

4 அடி அகலத்திற்கு ராட்சத தோற்றத்தில் உள்ள அந்த பூவே, இதுவரை பூத்த மலர்களில் மிகப்பெரியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த வகை மலர்கள் ஒட்டுண்ணி தாவர வகையைச் சேர்ந்தவை.

மற்றொரு தாவரத்தில் வளரும் இந்த செடிகளில் மலர்கள் மலர்ந்து வெளியே வரும் போது தான், அவை மற்றொரு தாவரத்தில் ஒட்டுண்ணியாக இருப்பதே தெரியவரும்.

உருவத்தில் பெரிதாக இருந்தாலும், அந்த பூவில் இருந்து அழுகிய இறைச்சியின் நாற்றம் வீசும். இதனால் இந்த மலரை பிணமலர் என்று விஞ்ஞானிகள் அழைப்பார்கள். உருவத்தில் பெரிதாக இருந்தாலும் ஒருவாரம் மட்டுமே ரப்லேசியா உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.