சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்: பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை
Published : Jan 04, 2020 1:56 PM
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்: பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை
Jan 04, 2020 1:56 PM
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதவி ஏற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேவி என்ற பெண் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில்,எதிர்த்துப் போட்டியிட்ட பிரியதர்ஷினி தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தேவி தொடர்ந்த அவசர வழக்கில் பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், மாநிலத் தேர்தல் ஆணையரும், பிரியதர்ஷினியும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.