​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

Published : Jan 03, 2020 1:31 PM

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

Jan 03, 2020 1:31 PM

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் அதை ஓட்டிய கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாறில் 4 சென்டி மீட்டரும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியிருப்பதாக கூறியுள்ள வானிலை மையம்,
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.