குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பு ஊர்திகள்: மேற்குவங்கம், கேரளா, மகாராஷ்டிரா சேர்க்கப்படாததால் சர்ச்சை
Published : Jan 03, 2020 1:11 PM
குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பு ஊர்திகள்: மேற்குவங்கம், கேரளா, மகாராஷ்டிரா சேர்க்கப்படாததால் சர்ச்சை
Jan 03, 2020 1:11 PM
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்திகளுக்கான பட்டியலில் மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிராவை மத்திய அரசு சேர்க்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களில், மத்திய அமைச்சகங்கள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பது வழக்கம்.
வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள அணிவகுப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 16 மாநிலங்களின் பெயர்களும், 6 மத்திய அமைச்சகங்களின் பெயர்களும் மட்டும் உள்ளன.
இதை திரிணமூல் காங்கிரஸும், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளும் விமர்சித்துள்ளன. அதேநேரத்தில் ஆண்டுதோறும் 16 மாநில ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்படும் வழக்கத்தின்படியே தற்போதும் நடந்துள்ளது என்று பாஜக பதிலளித்துள்ளது.