குஜராத் உயிரியல் பூங்காவில் வாட்டும் குளிரிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற புதிய யுக்தி
Published : Jan 02, 2020 8:52 AM
குஜராத் உயிரியல் பூங்காவில் வாட்டும் குளிரிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற புதிய யுக்தி
Jan 02, 2020 8:52 AM
குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளைக் காக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தலைநகர் அகமதாபாத்தில் கன்காரியா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளும் ஏனைய உயிரினங்களும் வாடின. இதையடுத்து குளிரில் இருந்து விலங்குகளைக் காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன.
கடுங்குளிரால் குறைவாக உணவு எடுத்துக் கொண்ட விலங்குகள் தற்போது வெப்பமான சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பின்னர், அதிகம் உணவு சாப்பிடுவதாக விலங்கியல் பூங்காவின் இயக்குநர் ஆர்.கே. சாஹூ தெரிவித்துள்ளார்.