டெஸ்ட் போட்டியின் நாட்களை நான்காக குறைக்கும் ஐசிசி முடிவுக்கு இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கத்தால் டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகல்-இரவு டெஸ்டை அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 தினங்களாக குறைக்க ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.
2023-ம் ஆண்டு தொடங்க உள்ள டெஸ்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து 4 நாள் டெஸ்டை கட்டாய நடைமுறைக்கு கொண்டுவர ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஐசிசி-யின் இந்த முடிவை ஆதரிக்க தயாராக இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.