​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முறையான அனுமதியின்றி தேவாலயத்தில் பாங்கு ஓதிய இமாம் கைது

இங்கிலாந்தில் தேவாலயத்தில் அனுமதியின்றி பாங்கு கூறிய இமாம் கைது செய்யப்பட்டார். லங்காஷையர் என்ற இடத்தில் பிளாக்பர்ன் என்ற தேவாலயம் உள்ளது. இங்கு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் இருதரப்பினரும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இருதரப்பினரும் அதற்கான முறையான அனுமதி பெற வேண்டும் என்பது...

முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஓவியம் வரைந்து அஞ்சலி

இங்கிலாந்தில் முதலாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களை கடற்கரை மணலில் ஓவியமாக வரைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் போரில் உயிரிழந்த வீரர்களை கவுரவிக்கும் வகையிலும்,...

மறைந்த லெய்செஸ்டர் கால்பந்து அணியின் உரிமையாளருக்கு, பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு அஞ்சலி

மறைந்த லெய்செஸ்டர் கால்பந்து அணியின் உரிமையாளருக்கு, பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தினர். தாய்லாந்து கிங் பவர் இண்டர்நேஷன் குழுமத்தின் தலைவருமான விச்சாய் ஸ்ரீவதனபிரபா,((Vichai Srivaddhanaprabha)) கடந்த மாதம் 27ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். இவருக்கு, லெய்செஸ்டர் நகர கால்பந்து மைதானத்தில்,...

இங்கிலாந்தில் எரியும் சிலுவையுடன் ஊர்வலம் நடத்திய பொதுமக்கள்

இங்கிலாந்தில் 1605ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிமருந்து சதித்திட்டத்தை நினைவு கூரும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்றைய தினத்தில் அரச குடும்பத்தை கொலை செய்ய நடந்த முயற்சியைக் கண்டித்து ஆண்டுதோறும் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடந்த பேரணியில் பழங்கால...

முதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

முதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக லண்டனில் உள்ள லண்டன் சதுக்கம் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பழங்கால கோட்டையின் மேலேறிய ராணுவ வீரர் ஒருவர் குழல் இசையை இசைத்து அஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தி வந்த...

இங்கிலாந்தில் வளர்ப்பு பிராணிகள் சந்தையில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் வளர்ப்பு பிராணிகள் விற்கப்படும் சந்தையில் தீவிபத்து ஏற்பட்டபோது, விஷப்பாம்புகள் தப்பிச் சென்றுவிட்டன. நாட்டிங்ஹாம் பகுதியில் உள்ள வளர்ப்பு உயிரினங்கள் விற்கப்படும் சந்தை ஒன்று உள்ளது. இங்கு அரியவகை பல்லிகள், பறவைகள், சிலந்திகள், கடுமையான விஷம் கொண்ட மற்றும் விஷமற்ற பாம்புகள்...

கடல் வழியாக நீச்சலடித்து இங்கிலாந்தை சுற்றி வந்த நீச்சல் வீரர்

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக நீச்சல் வீரர் ஒருவர் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் நீச்சலடித்து இங்கிலாந்து நாட்டையே சுற்றி வந்துள்ளார். ரோஸ் எட்கிலே ((Rose Edgley)) என்பவர் ஜூன் மாதம் ஒன்றாம்தேதி கென்டிஷ் என்ற இடத்தில் இருந்து தனது நீச்சல்...

வரிக்குதிரையையும், கழுதையையும் இணைத்து புதிய உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

இங்கிலாந்தில் கழுதையையும், வரிக்குதிரையையும் இணைத்து புதிய உயிரினத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். சோமர்சட் என்ற இடத்தில் பண்ணை ஒன்றில் வரிக்குதிரையும், கழுதைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஸிக்கி ((Ziggy)) என்ற வரிக்குதிரையையும், ராக் ((Rag)) என்ற கழுதையையும் இணைத்து புதிய உயிரினத்தை உருவாக்க...

இங்கிலாந்தில் லைசஸ்டர் கால்பந்து அணி உரிமையாளரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

இங்கிலாந்தில் விளையாட்டு மைதானம் அருகே அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் தீப்பிடித்து நொறுங்கியது. லைசஸ்டர் சிட்டி ((Leicester City)) கால்பந்து அணியின் உரிமையாளரான விச்சை ஸ்ரீவத்தனப்பிரபா ((Vichai Srivaddhanaprabha)) என்பவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் நேற்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து லைசஸ்டரில் உள்ள கிங்...

இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற விமானம் விபத்தில் இருந்து தவிர்ப்பு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற விமானம் ஆஸ்திரேலியாவில் விபத்தில் சிக்க இருந்தது தெரியவந்துள்ளது. மனைவி மேகன் மெர்கலுடன் அவர் சென்ற விமானம் சிட்னியில் தரையிறங்குமுன், அதே ஓடுபாதையில் வேறொரு விமானம் இறங்கிக் கொண்டிருந்தது. இதனை கவனித்த விமானி துரிதமாக செயல்பட்டு சட்டென்று விமானத்தை...