ஆமையை வேட்டையாட நினைத்து அது முடியாமல் ஏமாற்றமடைந்து நிராசையுடன் செல்லும் சிறுத்தையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
பிரேசிலின் பான்டனடால் மாட்டோகுரோசென்ஸ் தேசிய உயிரியல் பூங்காவில் (Pantanal Matogrossense National Park) பசியால் அலைந்த இந்த சிறுத்தை அங்குள்ள தண்ணீர் குட்டைக் கரையில் ஆமை ஒன்றைக் கண்டது.
அதைப் பிடித்து விருந்தாக்கலாம் என்ற நினைப்புடன் அருகில் சென்றது.
ஆபத்து வருவதை உணர்ந்த ஆமை தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுந்து பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டது. ஃபுட்பால் வீரனின் லாவகத்துடன் ஆமையை அங்கும் இங்கும் புரட்டி பார்த்த சிறுத்தை, காரியம் நடக்காது என்றவுடன் மெதுவாக நடையைக் கட்டியது.