தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.
தலைநகர் டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மும்பை இந்தியா கேட் பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்போது, விண்ணைப் பிளக்கும் வகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாந்த்ரா, மரைன் டிரைவ் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமானோர் கூடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில், ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி, புத்தாண்டை மகிழ்ச்சிபொங்க வரவேற்றனர்.
உத்தரகண்ட் மாநிலம் அவுலியில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், 2020ம் ஆண்டை வரவேற்று, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்று, வழிபாடு நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெருந்திரளானோர் ஒன்றுகூடி புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்று, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்தனர்.
இதேபோன்று, கேரள மாநிலம் திருவனந்தபுரம், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், 2020 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள், புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.