Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..
Published : Dec 25, 2024 6:05 PM
Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..
Dec 25, 2024 6:05 PM
ஊசிபோன பிளம் கேக் விற்ற புகாருக்குள்ளான அஸ்வின்ஸ் ஸ்வீட் கடை இது தான்..!
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு 5 க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு தயாரிப்பு இனிப்பு வகைகள் என்ற பெயரில் செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் கரூர் கிளையில் ரிச் ப்ளம் கேக் வாங்கிச்சென்ற வாடிக்கையாளர் தான் கேக் ஊழி போயிருப்பதாக புகார் தெரிவித்தவர்.
கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பிரபாகர் என்பவர், தனது குழந்தைகளுக்காக , கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸில் ரிச் பிளம் கேக் உள்ளிட்ட இனிப்புவகைகளை வாங்கிச்சென்றுள்ளார். வீட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஆசை ஆசையாய் அதனை பிரித்து பார்த்த போது தான் வாங்கிச்சென்ற ரிச் கேக் பூசனம் பிடித்து ஊசிபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் வாங்கியதில் ரிச் கேக் தான் விலை அதிகம் என்பதால், உடனே போன் செய்து கேக் கெட்டு போயிருப்பதாக கூறி உள்ளார்
காலையில் அந்த ஊசிபோன கேக்குடன் கடைக்கு சென்ற பிரபாகர், காலாவதி தேதி முடிவதற்கு முன்னதாகவே கேக் ஊசி போய்விட்டதே எப்படி ? எந்த அடிப்படையில் காலாவதி தேதி ஸ்டிக்கர் ஒட்டப்படுகின்றது ?என்று கேள்வி எழுப்பினார். கடை ஊழியர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர். விற்காமல் இருக்கும் கேக்கு டப்பாக்களில் காலாவதி தேதி ஸ்டிக்கரை மாற்றி ஓட்டி இருக்கலாம் என்று சிலர் குற்றஞ்சாட்டிய நிலையில், கடையில் இருந்தவர்கள் ஊசி போன கேக்கிற்கு பதில் நல்ல கேக் தருவதாக கூறினர், ஊசிபோன கேக் குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆய்வுக்கு வருவதாக கூறி காத்திருக்க வைத்த அதிகாரியை இடையில் யார் தடுத்தனரோ தெரியவில்லை , சென்னையில் புகார் அளியுங்கள் என்று கூறி ஆய்வு செய்யாமல் தவிர்த்து விட்டதாக பிரபாகர் தெரிவித்தார்.
வீட்டு முறை பாரம்பரிய இனிப்புகள் என்பதால் தரமாக இருக்கும் என்று நம்பி வாங்கியதாகவும், ஊசிபோன கேக்கை விற்றதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
ஊசி போன கேக் விவரம் ஊடகங்களில் வெளியானதும் உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் அங்கு ஆய்வு செய்து கேக் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச்சென்றனர்
தாங்கள் கருரில் கேக் தயாரிப்பதில்லை என்றும் பெரம்பலூரில் தயாரிக்கப்பட்டு தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுவதாகவும், இந்த ஒரே ஒரு டப்பாவில் உள்ள கேக் மட்டும் ஊசி போனது ஏன் ? என்று தெரியவில்லை, எப்படி கெட்டு போச்சி என்று தெரியவில்லை என்றனர். மேலும் வேறு கேக் தருவதாக கூறியும் கேட்காமல் தங்கள் மீது புகார் அளித்து விட்டதாக தெரிவித்தனர்.