போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழங்க உத்தரவிடக்கோடி தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக பிப்ரவரி 3ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.