கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் கடந்த 4 நாட்களாக ஸ்கேன் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாக நோயாளிகள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.