​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பயணியுடன் தகராறு செய்து கீழே இறக்கிவிட்ட தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் உரிமம் ரத்து

கும்பகோணத்தில் பயணியிடம் தகராறு செய்து கீழே இறக்கிவிட்ட தனியார் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரின் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் ஸ்ரீ லட்சுமி என்ற தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த பயணியை கீழே இறங்கச் சொல்லி அந்த தனியார் பேருந்தின்...

ஆரூரான் சர்க்கரை ஆலை - திவால் நோட்டீஸ்

கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளதால், அந்த ஆலை நிர்வாகம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகள் பேரில் கடன் பெற்றுள்ள நிலையில், அந்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.  கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில்...

துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு வழங்க கோரி கும்பகோணம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுவத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் நகராட்சியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலியாக தற்போது நாளொன்றுக்கு 255 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,...

ஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாள் கொண்டாட்டம்..! பால் பண்ணை அதிபர் ஆடம்பரம்

கும்பகோணத்தில் பால்பண்ணை அதிபர் ஒருவர் தனது மகனின் முதலாவது பிறந்த நாளை ஹெலிகாப்டரில் இருந்து கிலோ கணக்கில் ரோஜாப்பூக்களை தூவி கொண்டாடினார். அனுமதித்த அளவை விட ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது கும்பகோணம் அடுத்த மருதா நல்லூரில் பால்பண்ணை நடத்திவரும்...

கும்பகோணம் ஐங்கரன் காபி பெயரில் உரிமம் பெறாதோர் உணவகம் நடத்த தடை

கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில், உரிமையாளரை தவிர பிறர் உணவகம் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது தங்களது வர்த்தக முத்திரை என்றும்,...

கொத்தடிமைகளாக இருந்த 5 சிறார்கள் உட்பட 54 பேர் மீட்பு

கும்பகோணம் அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 54 பேரை அதிகாரிகள் மீட்டனர். கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தேவன்குடி கிராமத்தில் சேகர், ராஜு ஆகிய இருவர் இணைந்து செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இங்கு அரியலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர்...

ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று கும்பகோணம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படவேண்டும் என்பது மரபாக...

இரு பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் - 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் சரபங்கா நதியில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் மாடுகள் புதைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்காடு மலை பகுதியில் சரபங்கா நதி உருவாகி, சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எம்செட்டிபட்டி பகுதி வழியாக செல்கிறது. இந்த நதி நீரை அப்பகுதியினர் விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்த...

ஏழ்மையால் படிப்பை தொடரமுடியாத அரியலூர் சித்த மருத்துவ மாணவி

தமிழின் பெருமைகளை நாடுகடந்து சென்று பரப்பிவரும் அரியலூரைச் சேர்ந்த சித்த மருத்துவ மாணவி பத்மபிரியா, ஏழ்மையால் தனது மருத்துவ படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் தனியார் பள்ளியொன்றில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதனை தெரிவித்த அவர்,...

நாகநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற 1008 சங்கு அபிஷேகம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் ஆயிரத்து 8 சங்குகளைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. நவக்கிரக தலங்களில் ராகுவுக்கான பரிகாரத் தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கும்பகோணம் மற்றும்...