கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கெஜமுடியில் கடந்த 10ம் தேதி யானை தாக்கி படுகாயங்களுடன்சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த சூழலில் கட்டணம் செலுத்த முடியாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.