​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்

Published : Dec 04, 2024 4:29 PM

மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்

Dec 04, 2024 4:29 PM

ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார்.

சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோரும் அப்போது உடன் இருந்தனர். இதன் மூலம் புதிய அரசு அமைப்பதில் கடந்த 11 நாட்களாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக, மும்பையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

மும்பை ஆசாத் மைதானத்தில் வியாழனன்று நடைபெறும் விழாவில் 3வது முறையாக முதலமைச்சராக பட்னாவிஸ் பதவி ஏற்க உள்ளார்.