அ.தி.மு.கவின் எதிர்காலம் கருதி கட்சியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது ஜானகி அம்மையாரின் பக்குவத்தை எடுத்துக் காட்டியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் காணொலி காட்சி மூலமாக பேசிய ரஜினி இதனை தெரிவித்தார்.
அரசியலுக்கு வர வேண்டும் என சிலர் கூறிய யோசனையைக் கேட்டு, தாம் அரசியலுக்கு வந்திருந்தால் நிம்மதி, செல்வம் உள்பட அனைத்தையும் இழந்திருப்பேன் எனவும் ரஜினி கூறினார்.