​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை அருகே ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த நபர் கைது

Published : Nov 21, 2024 7:32 AM

கோவை அருகே ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த நபர் கைது

Nov 21, 2024 7:32 AM

கோவை மாவட்டம் வால்பாறையில், ஏடிஎம் மில் பணம் எடுத்துத் தருவது போல் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 44 ஏடிஎம் கார்டுகள் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முருகம்மாள் என்ற பெண்ணிடம் ஏடிஎம் கார்டு மாற்றிக் கொடுத்து பணத்தைக் களவாடிய புகாரையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் நஜீப்பை கைது செய்தனர்