நெல்லையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா உத்தரவிட்டுள்ளார்.
தங்களிடம் உள்ள மாடுகளின் எண்ணிக்கை, அவற்றை கட்டுவதற்கான தொழுவ வசதி உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து உரிய கட்டணம் செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால், உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பிராணிகள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.