இன்றைய காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று மறைந்து வெறுப்புணர்வே ஓங்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் வர்தாவில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வெளிநாடுகளில் தேசத்திற்கு எதிராகவும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பேசுவதாக ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.
நாட்டின் கலாச்சாரத்தை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சி, 'அர்பன் நக்சல்களால்' நடத்தப்படுவதாகவும் பிரதமர் கூறினார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் கூட காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை உள்ளதாகவும், கர்நாடக காங்கிரஸ் அரசு விநாயகர் சிலையை போலீஸ் வேனில் ஏற்றியதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.