​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி.எஸ்.டி. பற்றிய கேள்வி... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன்

Published : Sep 13, 2024 7:22 AM

ஜி.எஸ்.டி. பற்றிய கேள்வி... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன்

Sep 13, 2024 7:22 AM

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

தன்னுடைய பேச்சால் அவர்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கலாம் என கருதி சீனிவாசன் வருத்தத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஜி.எஸ்.டி. பற்றிய எந்த விமர்சனத்திற்கும் பதில் அளிக்க தாம் தயார், ஆனால் ஒரு வாடிக்கையாளர் என்ன சாப்பிடுகிறார் என்பதை பொதுவெளியில் எப்படி பேசலாம்? என சீனிவாசனிடம் நிர்மலா சீதாராமன் கேட்டதாக சொல்லப்படுகிறது.