கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் என வெளியிட்ட பட்டியலில் தமிழகம் இடம் பெற்றதாகவே தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அப்பட்டியலில் கேரளா முதலிடத்தையும் முறையே ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தமிழகம் இப்பட்டியலில் இடம் பெற்றதாகவே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.