திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேவை செப்டம்பர் 9 முதல், அக்டோபர் 3 வரையிலான 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பிட் லைன் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்படும் ரயிலும், மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.