நடிகர் விஜய் துவங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு கட்சியின் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் ஆய்வு செய்த போது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். முன்னதாக பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த், மாநாடு நடத்துவதற்கான தேதியை கட்சித் தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார் என கூறினார்.