காண்டாமிருகக் கொம்பு விற்பனை - ஐந்து பேரை தூக்கிய வனத்துறை..!
Published : Aug 27, 2024 3:17 PM
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்றதாக ஓய்வு பெற்ற கப்பல் படை அலுவலர் கலிய பெருமாள் உள்ளிட்ட 5 பேரை வனத்துறை கைது செய்தது.
கடந்த 1982ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பணிபுரிந்த போது, நண்பர் ஒருவர் தனக்கு காண்டாமிருக கொம்பை பரிசளித்ததாக கலிய பெருமாள் கூறியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவகுணம் கொண்ட காண்டாமிருக கொம்பு பல லட்சம் ரூபாய்க்கு கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கலிய பெருமாளிடமிருந்து காண்டாமிருக கொம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.