​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்திய பகுதியை கைப்பற்றிய உக்ரைன் - குர்ஸ்க்கில் உக்ரைன்வீரர் நடந்து செல்லும் வீடியோ வெளியீடு

Published : Aug 13, 2024 6:52 AM

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்திய பகுதியை கைப்பற்றிய உக்ரைன் - குர்ஸ்க்கில் உக்ரைன்வீரர் நடந்து செல்லும் வீடியோ வெளியீடு

Aug 13, 2024 6:52 AM

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

போரை தொடர அதிபர் புதின் விரும்பினாலும் ரஷ்யாவை அமைதி வழிக்கு கட்டாயப்படுத்தி கொண்டுவருவேன் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்திய பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக உக்ரைன் வீடியோ வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதியில் உக்ரைன் வீரர் ஒருவர் நடந்து செல்வது வீடியோவில் இடம்பெற்றது.