​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்.. 2047க்குள் 30 டிரில்லியன் பொருளாதார நாடாக உருவாக்குவது குறித்து ஆலோசனை

Published : Jul 27, 2024 8:06 AM

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்.. 2047க்குள் 30 டிரில்லியன் பொருளாதார நாடாக உருவாக்குவது குறித்து ஆலோசனை

Jul 27, 2024 8:06 AM

பிரதமர் மோடி தலைமையில் 9வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பாஜக அரசு மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைத்தபின் நடைபெற இருக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.

நாடு சுதந்திரம்பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுள்ளதாக கூறி, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.