வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகளை முறையாக சோதிக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு, பணியில் இருக்கும் போலீசார் அவற்றை அனுப்பிவிடுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வாகனங்களை சோதிக்காமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு காவலர் ஒருவர் அனுப்பியது தெரியவந்துள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.