​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க அதிகாரிகள் தடை..? வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் மறுப்பு

Published : Jul 24, 2024 5:59 PM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க அதிகாரிகள் தடை..? வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் மறுப்பு

Jul 24, 2024 5:59 PM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆடி பெளர்ணமி அன்று, பக்தர்கள் அன்னதானம் வழங்கவும், கடலில் ஆரத்தி வழிபாட்டுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்ததாக புகார் எழுந்த நிலையில், இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திமுக அரசு, இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு மட்டும் இடையூறு செய்துவருவதாகவும், முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் பக்தர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம், தரமற்ற உணவால் பக்தர்களின் உடல் நலம் பாதித்துவிடக்கூடாது என கருதியே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டு அன்னதானம் வழங்குமாறு வலியுறுத்துவதாகவும், கடலில் ஆரத்தி வழிபாடு வழக்கம்போல் நடைபெற்றதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.