மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19ன் படி கைது செய்யப்பட்டது தவறானது என கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்த மனு குறித்தும், மதுபான கொள்கை ஊழல் நிதியை தேர்தலுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறையின் புகார் குறித்தும் விரிவான அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டாலும், இதே முறைகேட்டில், சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனுக்களை வரும் ஜூலை 17ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.