பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லாச் சான்று வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வெங்கடாஜலபதி நகரில் புதிதாக கட்டப்பட்ட மினி மஹால் மேலாளர் துரைராஜ், லஞ்சம் கேட்பது குறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.
அவர்களின் ஆலோசனை பேரில் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற துரைராஜ் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா இருவரையும் கையும் களவுமாக பிடித்தார்.