​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் முடிந்த சாலைப்பணிகளுக்கு பணம் கொடுக்க ரூ.61,000 லஞ்சம் கேட்ட வரைவாளர், உதவியாளர் கைது

Published : Jun 21, 2024 7:43 AM

சேலத்தில் முடிந்த சாலைப்பணிகளுக்கு பணம் கொடுக்க ரூ.61,000 லஞ்சம் கேட்ட வரைவாளர், உதவியாளர் கைது

Jun 21, 2024 7:43 AM

சேலத்தில் சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் 61 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சி முகமை இளநிலை வரைவாளர், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தாம் முடித்த பணிகளுக்கு வழங்க வேண்டிய 91 லட்சம் ரூபாய் பில்களுக்கு கையெழுத்துப் போட இளநிலை வரைவாளர் பணம் கேட்கவே, ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வரைவாளரிடமிருந்து மொத்தம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்