​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு அலுவல்களுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து 7 பேர் கொண்ட அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள...

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது... மதுரையை சேர்ந்த பரணிபாரதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல்...

சுமார் ரூ.200 கோடி அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுனத்திற்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற,...

ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையர் கைது

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார். கொத்தகோட்டை பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர், விவசாய நிலத்தை அளவீடு செய்ய வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது நில அளவையர் அசோகன் நிலத்தை...

அரசு பேருந்து ஓட்டுநருக்கு கடன் வழங்குவதற்கு, லஞ்சம் வாங்கிய போக்குவரத்துக் கழக கூட்டுறவுச் சங்கச் செயலாளர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு கடன் வழங்குவதற்கு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போக்குவரத்துக் கழக கூட்டுறவுச் சங்கச் செயலாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த நன்னிக்கவுண்டர், திருச்செங்கோட்டில் அரசுப்...

திருப்பத்தூர் அருகே பிறப்பு சான்றிதழ் வழங்க, சுகாதார ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக புகார்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிறப்பு சான்றிதழ் வழங்க சுகாதார ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூரை அடுத்துள்ள புதூர்நாடு மலைகிராமத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக மனோகரன்...

நில ஆவண மோசடி வழக்கில் கைது செய்யாமலிருக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

சென்னை மத்திய குற்றப்பிரிவில் நில ஆவண மோசடி வழக்கொன்றில் கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் உட்பட 2 அதிகாரிகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்...

லஞ்சம் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-ம் இடம்...!

லஞ்சம் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்'ஸ் இந்தியா கரப்சன் சர்வே 2018-ன் படி, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லஞ்சம்  குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. முதலிடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில், பத்திரப்பதிவு,...

தொழில் தொடங்க பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது

தொழில் தொடங்க பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் சுனில்குமார் ரத்தினம் என்பவர் தொழில் தொடங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையத்தை அணுகியுள்ளார். அங்கு உதவி இயக்குநராக பணிபுரியும் அருள் என்பவர்,...

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர், லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின்

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர் லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர்கள், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஊழல்...