கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கெண்டையூரில் மேல்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரில் எலும்புகள் மற்றும் இறைச்சி கழிவுகள் வந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி தலைவர் மற்றும் ஆணையார் நேரில் ஆய்வு செய்தனர்.
மேல்நிலை தொட்டியில் விலங்கோ, பறவையோ விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தொட்டியை சுத்தம் செய்த பின் மீண்டும் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அந்த நீரை நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின் குடித்து பார்த்து ஆய்வு செய்தார்.