விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் நேரம், ஆற்றல், பணம், எரிபொருள் எல்லாமும் வீண் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறினார்.
சென்னை பட்டிணப்பாக்கத்தில் பேட்டியளித்த அவர், டெபாசிட் பறிபோகும் என்ற அச்சத்தால் இடைத்தேர்தலை புறக்கணிக்கவில்லை என்றும் விக்கிரவாண்டி அ.தி.மு.க.வின் கோட்டை என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலையை மாற்றி விட்டு பின்லேடனை பா.ஜ.க. தமிழகத் தலைவராக போட்டால் கூட அ.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்ளாது என்றும் ஜெயகுமார் குறிப்பிட்டார்.