பிரதமராக மோடி 3 ஆவது முறையாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.கவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திருவண்ணாமலையில் மீண்டும் மோடி என்ற வாசகத்தை அகல் விளக்கேற்றி வைத்து கட்சியினர் கொண்டாடினர்.
காஞ்சிபுரத்தில் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியங்கள் முழங்க ராஜ வீதிகளில் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றும் பா.ஜ.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மற்றும் சிவகங்கையில், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பா.ஜ.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.