கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆவின்பால் ஏற்றி வந்த டேங்க்கர் லாரி கவிழ்ந்து, 12 ஆயிரம் லிட்டர் பால் வீணாகியது.
கரூரிலிருந்து தாளியாம்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்துக்கு லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சிவா, வளைவு ஒன்றில் திரும்புகையில், எதிரே திடீரென குறுக்கிட்ட பைக் மீது மோதுவதைத் தவிர்க்க வாகனத்தை திருப்பும்போது விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.