​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் 2026-இல் கூட்டணி ஆட்சி தான் அமையும்: அண்ணாமலை

Published : Jun 06, 2024 7:14 PM

தமிழ்நாட்டில் 2026-இல் கூட்டணி ஆட்சி தான் அமையும்: அண்ணாமலை

Jun 06, 2024 7:14 PM

பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லாததால் இதுவரை வராத சமூகங்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் என முன்பு கூறிய அ.தி.மு.க., தேர்தல் தோல்விக்குப் பின் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப் போல பேசுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3 முனை போட்டி தற்போது 2 முனையாக மாறியுள்ளதாகவும், அடுத்ததாக பா.ஜ.க.வுக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வுடைய காலம் வரும் என்றும், யாரும் விரலை வெட்டிக் கொள்வது, மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.