அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளன.
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சர் பீமா காண்டு உள்பட 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எஞ்சிய 50 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 46 இடங்களில் பா.ஜ.க. வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் வென்றுள்ளது.
அதேபோல், சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வென்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியமைக்கிறது.
சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டும் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
((
சிக்கிமில் ஆட்சியை தக்க வைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி