​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன்கள் கரை ஒதுங்கின.. கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களே காரணம் என தகவல்

Published : May 28, 2024 9:43 PM

விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன்கள் கரை ஒதுங்கின.. கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களே காரணம் என தகவல்

May 28, 2024 9:43 PM

ராமேஸ்வரம் அருகே பாம்பன் முகம்மதியபுரம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் விஷத்தன்மை கொண்ட பலூன் மீன் எனப்படும் பேத்தை மீன்கள் அதிக அளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.

இந்த மீன்களின் முள், தோல் மற்றும் தசைகளில் டெட்ரோடோடாக்சின் எனும் விஷம் உள்ளதாகவும் இன்பெருக்கத்திற்காக பேத்தை மீன்களின் நடமாட்டம் கரையோரப் பகுதிகளில் அதிகளளவில் காணப்படும் என்றும் தெரிவித்த மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்கள் இறந்தது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறினர்.