​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா, ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகள் செல்லத் தொடங்கினர்

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பயணத்தைத் தொடங்கினர். யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மற்றும் ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத் தந்தை உள்ளிட்டோரால் கொடியேற்றம் செய்யப்பட்டு திருவிழா தொடங்குகிறது. இன்று அதிகாலை முதலே ராமேஸ்வரத்தில் இருந்து...

86 நாட்களுக்குப் பின் சரக்குக் கப்பல் கடந்து செல்ல இயக்கப்பட்ட பாம்பன் தூக்குப்பாலம்

பாம்பன் தூக்குப்பாலம் வழியாக சரக்குக்கப்பல் கடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். கடலூரில் இருந்து வந்த ஷெர்ஜர் என்ற அந்த மிதவைக் கப்பல் கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகம் செல்கிறது. இதற்காக பாக்சலசந்தி கடல் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு பாம்பன்...

எல்லை தாண்டி மீன் பிடித்த தாக கூறி 9 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், கருப்பையா, காளியப்பன்,இராமகிருஷ்ணா, ரங்கதுரை, தனுஷ்கோடியான்,கணேசன் உள்ளிட்ட 9 மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்க...

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த ஒரு டன் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு சட்டவிரோதமாக ஒரு டன் பீடி இலையை  கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ஒரு டன் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சங்குமால் கடற்கரையில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரைபகுதியில் சந்தேகத்திற்கு...

உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் மீட்டனர். ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில், உடலில் காயங்களுடன் கரை ஒதுங்கிய டால்பினை, அப்பகுதி மீனவர்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த டால்பினை...

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில், விரைவில் ரயில் சேவை தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல்

ராமேஸ்வரம், பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில், விரைவில் ரயில் சேவை துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ரயில்வே வாரிய செயற்குழு இயக்குனர் வினோத்குமார் ஆய்வு செய்தார். பின்னர்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரின் காவல் மூன்றாவது முறையாக நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரின் காவலை மூன்றாவது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஜனவரி 13ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களின் படகு விபத்துக்குள்ளானது. படகில் வந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி,...

சிறப்பு முகாமில் இருந்து திரும்பிய யானைகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

சிறப்பு முகாமில் கலந்து கொண்டு திரும்பிய யானைகளுக்கு மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்று அளிக்கப்பட்டது. சிறப்பு முகாமில் இருந்து பழனிக்கு திரும்பி வந்த கோயில் யானை கஸ்தூரிக்கு, பெரியநாயகி அம்மன் கோயில் முன்பு திரண்ட பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மேளமதாளத்துடன்,...

கடலுக்குள் விடப்பட்ட 9 லட்சம் இறால் குஞ்சுகள்

ராமேஸ்வரத்தில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில், சுமார் 9 லட்சம் இறால் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில்,  மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக சுமார் 9 லட்சம் ஃபிளவர் வகை இறால் குஞ்சுகள் ராமேஸ்வரத்தின் ஓலைக்குடா...

கள்ள சந்தையில் விற்க கொண்டு செல்லப்பட்ட 560 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுச் செல்லப்பட்ட 560 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பாம்பன் தூக்கு பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது, கள்ள சந்தையில் விற்பனை...