இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதற்காக இண்டியா கூட்டணியினர் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றவும் தயங்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் கோசி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அவர், அனைத்து சமுதாய மக்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும் என இண்டியா கூட்டணி தலைவர்கள் விரும்புவதாக கூறினார்.
மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்ற இண்டியா கூட்டணியினர் முயற்சிப்பதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் 5 ஆண்டுகள் 5 பேர் பிரதமராக இருப்பார்கள் என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான ஆதரவை அளித்துவருவதாகவும் மோடி தெரிவித்தார்.