இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது உச்சம் தொட்டிருப்பதாக ஹாங்காங் ஷாங்காய் வங்கியின் புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகின் அதிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிப்பதாகவும் மார்ச் மாதத்தில் 61.8 புள்ளிகளாக இருந்த வளர்ச்சி வேகம் தற்போது 62.2 ஆக அதிகரித்து உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத் துறையும் உற்பத்தி துறையும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது