ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.14 லட்சம்.. உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் சிக்கியது
Published : Apr 22, 2024 6:21 PM
ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.14 லட்சம்.. உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் சிக்கியது
Apr 22, 2024 6:21 PM
தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது 14 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த அந்நபர் உரிய ஆவணமின்றி ஆடைக்குள் பல பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.