இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக குலு, சாம்பா, காங்கரா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியமான பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
காங்கராவில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஆற்றுப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2 நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என்றும் அதிகளவில் பனிப்பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.