உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் உட்பட அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளுக்காக பல்வேறு விருதுகள் பெறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டு மக்கள் தலை குனியும் அளவுக்கு ஊழல் செய்த கட்சி என்ற சாதனையை மட்டுமே தி.மு.க. செய்துள்ளதாக தெரிவித்தார்.