பா.ஜ.க மேல்தட்டு கட்சி, வடமாநில கட்சி என 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் கட்டமைத்த போலி பிம்பம் இந்த மக்களவை தேர்தலில் உடையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை நாளான வரும் ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருடையது? என்பது தெரிந்துவிடும் என்றார்.
தான் போட்டியிடும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு பணம், பரிசு தருபவர்களை விரட்ட மக்கள் தயாராகிவிட்டதாகக் கூறிய அண்ணாமலை, ஓட்டுக்கு தான் பணம் தரப்போவதில்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பா.ஜ.க சமூக விரோதிகளை அதிகம் கொண்ட கட்சி என்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.