விஜய் படத்தில் வருவது போல பொதுமக்கள் வாக்களிப்பது ஒரு விரல் புரட்சி என்று கோவை துடியலூரில் பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி செலுத்தப்போவது வாக்கு இல்லை ஒரு விரல் புரட்சி என்றும், மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காக வாக்களிக்க வேண்டும்.என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் கோயம்புத்தூர் முக்கிய நகரமாக இருக்க வேண்டும் , அதற்கான அனைத்து சக்திகளும் கோயம்புத்தூருக்கு உண்டு.
என்று அண்ணாமலை தெரிவத்தார் இன்றும் 16 நாட்கள் நாம் பணியாற்றினால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நமக்காக வேலை செய்வார் எற்று அண்ணாமலை கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக அரங்கில் நமது நாட்டை தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.